உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நண்பரை குத்தியவர் கைது

நண்பரை குத்தியவர் கைது

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் மதன் 30, ஆனைமலையன் பட்டியை சேர்ந்த கார்த்திக் 29,நண்பர்கள், மதன் ஆனமலையன்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் ஆட்டு கிடையை பார்த்து விட்டு திரும்பும் போது , அங்குள்ள குளத்து கரையில் டூவீலரில் வந்த மதனை மறித்து, கார்த்திக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகதகராறு செய்துள்ளார். அப்போது கார்த்திக் கத்தியால், மதனின் வயிற்றில் குத்தியுள்ளார். காயம்பட்ட மதன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை