உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் பணம் திருடியவர் கைது

வீட்டில் பணம் திருடியவர் கைது

தேனி: அரண்மனைப்புதுார் மேலத்தெரு வசந்தம் நகர் பாண்டி 45. இவர் தேனியில் உள்ள கடையில் டீ மாஸ்டராகவும், இவரின் மனைவி பேக்கரியில் வேலை செய்கின்றனர்.இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு செல்வது வழக்கம். டிச. 24ல் காலை 10:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர். மதியம் 1:00 மணிக்கு சாப்பிட வந்தபோது, வீடு திறந்து கிடந்தது. பாண்டி வீட்டிற்குள் சென்ற போது பழனிசெட்டிபட்டி காந்தாரி அம்மன் கோயில் தெரு கவுதம் காம்பீர் 20, பாண்டியை தள்ளிவிட்டு வெளியே ஓடிவிட்டார். பின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் காணவில்லை. பாண்டி பழனிசெட்டிபட்டியில் புகார் அளித்தார். போலீஸ் எஸ்.ஐ., மணிமாறன் கவுதம்காம்பீரை கைது செய்தனர். இந்த வாலிபர் மீது பழனிசெட்டிபட்டியில் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை