பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போடி: போடி தங்கமுத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி வாலஈஸ்வரி 26. திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் கார்த்திகேயன் 21, என்பருடன் சகஜமாக பேசி பழகினார். சில மாதம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் முன்பு இருந்தது போல தன்னிடம் பேச வேண்டும் என வாலஈஸ்வரியிடம் கார்த்திகேயன் கூறினார். இதற்கு வாலஈஸ்வரி சத்தம் போட்டு உள்ளார். ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வாலஈஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தார்.வாலஈஸ்வரி, ரங்கநாதன் இருவரும் சேர்ந்து கார்த்திகேயனை பிடித்து போலீசாரிம் ஒப்படைத்து உள்ளனர். போடி டவுன் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.