எஸ்.ஐ. யை வெட்ட முயன்றவர் கைது
சின்னமனூர்: சின்னமனூர் அய்யன் கோயில் தெருவை சேர்ந்த சங்கிலி கருப்பன் மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி 25, இங்குள்ள விஸ்வக்குளம் அருகில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து வந்த சின்னமனூர் எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசாரை பார்த்து பதுங்கி உள்ளார். சந்தேகமடைந்த எஸ்.ஐ. உடனே அவரை மடக்கி சோதனை செய்ய ஆரம்பித்த போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ். ஐ. யை வெட்ட முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட எஸ்.ஐ. அருண், ஒல்லிகுச்சியை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர்.