உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்லைன் ரம்மி விளையாட பணம் இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட பணம் இழந்தவர் தற்கொலை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு மகன் கணபதி 26, பி.ஏ., படித்த இவர் தேனியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணம் ஆகவில்லை. ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த விளையாட்டு மூலம் அதிகமான பணத்தை இழந்துள்ளார். இதனை ஈடு செய்வதற்கு மொபைல் போன் மூலம் அதிகமான கடன்கள் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.தினமும் குடித்துவிட்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி வந்தார். சில நாட்களுக்கு முன் கத்தியால் கையை காயப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஆண்டிபட்டி காமராஜர் நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை ரமேஷ் பாபு புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி