மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்,,
14-Aug-2025
தேவதானப்பட்டி; பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம் பஸ்ஸ்டாப் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் நீலகண்டன், மகா பிரபு, முத்துலட்சுமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெண்மணி, தாலுகா செயலாளர் முருகன், தாலுகா குழு உறுப்பினர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். குள்ளப்புரத்தில் மக்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் 10 க்கும் அதிகமான கல்குவாரி கிரசர்களை மூட வேண்டும். பஸ்ஸ்டாப் முதல் தெற்கு தெரு பள்ளிவாசல் வரை ரோடு அமைக்க வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.-
14-Aug-2025