உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்க்சிஸ்ட் காத்திருப்பு போராட்டம் மினிலாரியில் அழைத்து வரப்பட்ட பெண்கள்

மார்க்சிஸ்ட் காத்திருப்பு போராட்டம் மினிலாரியில் அழைத்து வரப்பட்ட பெண்கள்

தேனி : கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டத்திற்கு பெண்கள் மினி லாரியில் அழைத்து வரப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் சின்னமனுாரில் ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளை வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் மாநில குழு உறுப்பினர் லாசர், நிர்வாகிகள் தெய்வேந்திரன், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்காக அங்கேயே உணவு தயாரித்தனர். பட்டா வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். மினி லாரியில் பெண்கள் போராட்டத்திற்கு சின்னமனுார் பகுதிகளில் இருந்து பெண்கள் மினிலாரிகளில் அழைத்து வரப்பட்டனர். தற்போது பெண்களுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும் சூழலில் மினிலாரியில் அழைத்து வந்திருந்தனர். இதே நிலை மாவட்டத்தில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கும் சரக்கு வாகனத்தில் பெண்களை அழைத்து செல்லும் நிலை உள்ளது. ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால், உயிரிழப்புகள், பலர் காயமடையும் சூழல் உருவாகும். மினி லாரிகளில் மக்களை ஏற்றி செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ