உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி

டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி

தேவதானப்பட்டி: பெட்ரோல் பங்கில் முகமுடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். பணியாளர் சத்தம் போட்டதால் அங்கு வந்த கல்லூரி மாணவரிடம் வாட்ச், புத்தகப்பையை பறித்து தப்பினர்.தேவதானப்பட்டி அருகே கோட்டார்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 41. தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு நயரா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் விஜயகுமார் வாகனங்களுக்கு பெட்ரோல், நிரப்பும் வேலை செய்து கொண்டிருந்தார். பதிவு எண் இல்லாத டூவீலரில் வந்த மூன்று மர்மநபர்கள் 'மன்கிகுல்லா' அணிந்தும், பின்னால் உட்கார்ந்திருந்தவர் 'ஹெல்மெட்' அணிந்தும், மூன்றாம் நபர் 'கைலி வேஷ்டி' யால் முகத்தை மூடியபடி வந்தனர். மூன்று பேரில் ஒருவர் கையில் பட்டா கத்தியை காட்டி விஜயகுமாரிடம், பணப்பையை கேட்டனர். விஜயகுமார் தரமறுத்தார். தரவில்லை என்றால் வெட்டி விடுவேன் என மிரட்டியுள்ளனர். விஜயகுமார் சத்தம் போட்டுள்ளார். பெட்ரோல் பங்க்கில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் போலீசாருக்கு அலைபேசியில் தகவல் தந்தனர். அந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த சின்ன சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரணிதரனிடம் கொள்ளையர்கள் கத்தியை காட்டி வாட்ச் மற்றும் புத்தக்பையை பறித்து தப்பினர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை விசாரணை செய்து வருகிறார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ