மருத்துவ முகாம்
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பகவதியம்மன் நடுநிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் நடேசன் வரவேற்றார். பெரியகுளம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாண்டியன், பேரூராட்சி துணைத்தலைவர் அழகர், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் கோமதி மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர். பொதுமருத்துவம், மகப்பேறு,இருதயம், தோல், மனநல மருத்துவம் உட்பட 18 வகையான மருத்துவ பரிசோதனை நடந்தது. -