உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி மாணவிகளுக்கு மனநல விழிப்புணர்வு

கல்லுாரி மாணவிகளுக்கு மனநல விழிப்புணர்வு

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் 'இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார்.வாழை அறக்கட்டளை சமூக சேவகர் நாகமுத்து, ஹேமா, உடல் மறுவாழ்வு மைய நிறுவனர் தங்கம் ஆகியோர் பேசும்போது, 'ஆரோக்கியமான வாழ்விற்கு உடல் நலமும் மன நலமும் அவசியம். போதைப் பழக்கம் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகள் குறித்து தெரிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும்', என்றனர். இதுகுறித்து கதைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவிகள், விரிவுரையாளர்கள், கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ