உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி திருமணம்: கணவர் உட்பட 8 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம்: கணவர் உட்பட 8 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் சிறுமிக்கு திருமணம் முடித்தது குறித்து தகவல் அறிந்த ஆண்டிபட்டி விரிவாக்க அலுவலர் சாந்தா விசாரணை நடத்தினார். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு கடந்த ஏப்.6ல் அம்மச்சியாபுரம் முத்தையா கோயிலில் திருமணம் நடந்ததும் தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த கணவர் சுமன் 24, திருமண ஏற்பாடுகள் செய்த அவரது பெற்றோர் போத்தி, கருப்பாயி, சிறுமியின் பெற்றோர் முத்துப்பாண்டி, கார்த்திகை செல்வி, சிறுமியின் மூத்த சகோதரிகள் முத்துபிரபா, சுவாதி, அபி ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை