உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகன் படிக்காத வருத்தத்தில் தாய் துாக்கிட்டு தற்கொலை

மகன் படிக்காத வருத்தத்தில் தாய் துாக்கிட்டு தற்கொலை

சின்னமனூர்: மகன் சரியாக படிக்காத மன வருத்தத்தில் மகனுடன் சண்டையிட்ட தாய் தீபா 42, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் ராதகிருஷ்ணன் ரைஸ்மில் தெருவை சேர்ந்த செல்வம் மனைவி தீபா. இவர்களுக்கு மகேஸ்வரி என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர். தருண் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாக படிக்காததால் தேர்வு எழுத வேண்டாம் என பள்ளியில் கூறி விட்டனர். இதனால் தினமும் வீட்டில் தீபா தனது மகனை கண்டித்து சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் வெளியில் சென்றிருந்த போது வீட்டின் பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த கணவர் வீடு திரும்பி மனைவி பெட் ரூமிற்குள் உள்ளார் என்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காத்தல் சந்தேகமடைந்த செல்வம் கதவை உடைத்துள்ளார். உள்ளே மனைவி துாக் கிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். அக்கம் பக்கத்தினர் தீபாவை இறக்கி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !