தாய் மாயம் மகன் புகார்
போடி : போடி பொன்சன் நகரில் வசிப்பவர் பாபு 36. இவர் சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பரமராஜ், தாயார் தமிழ்செல்வி 61. இருவரும் மேலச்சொக்கநாதபுரம் மகாலட்சுமி நகரில் குடியிருந்து வருகின்றனர். நேற்று முன் தினம் பரமராஜ் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி தமிழ்ச்செல்வியை காணவில்லை. பாபு புகாரில் போடி தாலுாகா போலீசார் தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர்.