விபத்தில் மகன் கண் முன் தாய் பலி
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி விஜய் 33. இவர் உடல் நலம் பாதித்த தனது தாய் கருப்பாயியை 56, ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சை முடித்துவிட்டு, தனது டூவீலரில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்றுள்ளார். தேனி மெயின் ரோட்டில் சக்கம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் சென்ற சரக்கு லாரி டூவீலரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். கருப்பாயி மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை செல்லுார் லாரி டிரைவர் சீனி சையது அலியிடம் விசாரிக்கின்றனர்.