உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

போடி:போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கொம்புதூக்கி மலைக் கிராமம். இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. 1200 ஏக்கரில் இலவம், காபி, எலுமிச்சை, தென்னை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குலதெய்வமான கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு வரவும், கண்ணகி கோயிலுக்கு செல்லவும், விளை பொருட்களை கொண்டு வர ரோடு வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க கொம்புதூக்கி - கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை