உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்

மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்

தேனி : தேனியில் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் முழுவதும் மண் மேவி உள்ளதால் டூவீலர் ஓட்டிகள் விழுந்து எழுவது தொடர்கிறது.தேனி-மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்டசாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு செல்கின்றன. ஆனால், இந்த திட்டசாலை, தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ரோடு முழுவதும் மணல் பரவி உள்ளது. இதனால் திட்டசாலையில் இருந்து மெயின் ரோட்டில் திரும்பும் டூவீலர்கள் வாரி ரோட்டில் விழுவது தொடர்கிறது. மேலும் அப்பகுதியில் எழும் அதிக அளவு துாசியினால் மற்ற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டில் பரவியுள்ள மணல் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ