உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உயர் அதிகாரிகள் இன்றி அல்லாடும் நகராட்சி நிர்வாகம்

உயர் அதிகாரிகள் இன்றி அல்லாடும் நகராட்சி நிர்வாகம்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் துறை வாரியாக உயர் அதிகாரிகள் இல்லாததால் பல்வேறு வளர்ச்சி பணிகள் தேக்கம் அடைந்து வருகிறது. இந்நகராட்சியில் மேலாளர், பொறியியல் பிரிவில் எம்.இ., பணியிடங்கள் ஓராண்டுகளாக காலியாக உள்ளன. தேனி அல்லிநகரம் நகராட்சிமாவட்ட தலைநகரில் அமைந்துள்ளது. ஆனால் நகராட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உயர் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வளர்ச்சி, மேம்பாட்டுப் பணிகள் தொய்வடைந்து வருகிறது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மருத்துவ விடுப்பில் உள்ளதால், கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சங்கர், கூடுதல் பொறுப்பாக இந்நகராட்சியை கவனிக்கிறார். மேலாளர், முதுநிலை பொறியாளர் பணியிடம் ஓராண்டாகவும், நகரமைப்பு அலுவலர் பணியிடம் 7 மாதங்களாகவும் காலியாக உள்ளன. நகரமைப்பு 3 ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒருவர் மட்டும் பணியில் உள்ளனர். அவருக்கும் உசிலம்பட்டி நகராட்சியில் கூடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் அலுவலர், கணக்காளர், பொறியியல் பிரிவில் 5 ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களால் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கடைகள் ஏலம், புதிதாக தொழில் வரி, சொத்து வரி நிர்ணயம், வீட்டு மனை, கட்டுமான அனுமதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை