மேலும் செய்திகள்
சுற்றுலா மாவட்டம்: பயணிகள் திண்டாட்டம்!
14-Aug-2025
சின்னமனுார்:சின்னமனுார், சீப்பாலக்கோட்டை ரோட்டில் பிரதான பகிர்மான குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. ஐம்பதாயிரம் பேர் வசிக்கின்றனர். 'அம்ரூத் திட்டம்' செயல்படுத்தப்பட்ட பிறகு தினமும் குடிநீர் சப்ளை என்பது கனவாய் போனது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சீப்பாலக்கோட்டை ரோட்டில், பழைய பாளையம் ரோடு சந்திப்பில் குடிநீர் பகிர்மான குழாய் கடந்த 10 நாட்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால் வெளியேறிய குடிநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் ரோடே வெள்ளக் காடாக மாறியுள்ளது. வாகனங்கள் செல்வோர், நடந்து செல்வோருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. பொது மக்கள் கமிஷனரிடம் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். கமிஷனர் கோபிநாத்தை நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, பதிலளிக்கவில்லை. நகராட்சியின் குடிநீர் பிரிவு தொழில்நுட்பர் (Fitter) காளிதாஸ் கூறுகையில், ''அந்த இடத்தில் நான்கைந்து பகிர்மான குழாய்கள் உள்ளன. அம்ரூத் திட்ட பகிர்மான குழாயில் குடிநீர் சப்ளை இன்னமும் துவக்க வில்லை. எனவே அதில் பிரச்னை இருக்காது. எந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து சீரமைப்போம்., என்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெற்கு ரத வீதியில் குழாய் உடைந்து 10 நாட்களாக குடிநீர் வீணாவதை சரி செய்யாமல் நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருவதை சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
14-Aug-2025