உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் புத்தாடைகள் வழங்கல்

கோயில் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் புத்தாடைகள் வழங்கல்

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் புத்தாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இக் கோயில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக சின்னமனூர் நகராட்சியில் இருந்து அனைத்து பணியாளர்கள், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, தலைமையில் கோயிலிற்கு ஊர்வலமாக சென்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கும்பாபிஷேக பணிகள் மேற்கொண்ட கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி தலைவர் அய்யம்மாள் சார்பாக புத்தாடைகளை ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். மேலும் வாழைத்தார், கரும்பு கட்டு, அரிசி உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் நதியா, நகராட்சி துணை தலைவர் முத்துக் குமார், தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி பஞ்சாப் குமரன், நகரமைப்பு அலுவலர் தங்கராஜ், வருவாய் அலுவலர் வாசு மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அனைத்து பணியாளர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை