உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு செக்யூரிட்டி கொலை வழக்கு கிரைம் பிராஞ்சில் ஒப்படைக்க ஆலோசனை

மூணாறு செக்யூரிட்டி கொலை வழக்கு கிரைம் பிராஞ்சில் ஒப்படைக்க ஆலோசனை

மூணாறு: மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்து ஒரு மாதம் ஆகியும் விசாரணையில் முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜன்சி மூலம் செக்யூரிட்டியாக பணியாற்றினார். அவர் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோரின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதனால் கொலை தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர். அப்படியும் கொலையாளி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை ' மெட்டல் டிக்டேக்டர்' மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நீர் நிலைகளில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆலோசனை: கொலை நடந்து இன்றுடன் (செப்.23) ஒரு மாதம் ஆகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதனால் வழக்கை கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி