உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முத்துமாரியம்மன் கோயில் புனரமைப்பு பணி துவக்கம்

முத்துமாரியம்மன் கோயில் புனரமைப்பு பணி துவக்கம்

ஆண்டிபட்டி, : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் டிச.,10ல் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் ரூ.11.10 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் துவங்கியது. கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை பெரியகுளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கோயில் பணியாளர்களுக்கு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. புனரமைப்பு பணிகளை விரைவில் முடித்து மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், பாலசுப்பிர மணி, கஸ்தூரி, மீனாட்சி, தி.மு.க., நிர்வாகிகள் சரவணன், சேகர், உபயதாரர் சேட்டுபரமேஸ்வரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை