தேர்த்திருவிழா நோட்டீசில் நகராட்சி தலைவர் பெயர் மிஸ்சிங் நெருக்கடியால் புதிய நோட்டீஸ் வினியோகம்
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நோட்டீசில் நகராட்சி தலைவர் பெயர் இல்லாததால் தி.மு.க.,வினரின் நெருக்கடியால் பெயர் சேர்த்து புதிய நோட்டீஸ் அவரச, அவசரமாக வினியோகிக்கப்பட்டது.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப்.2 முதல் ஏப்.11 வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது. இதில் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் மட்டும் இடம் பெற்றிருந்தது. பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா பெயர் இல்லை. இதற்கு தி.மு.க.,வினர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். அறநிலைய துறை அதிகாரிகள் அவசர, அவசரமாக நகராட்சி தலைவர் பெயர் சேர்க்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இது குறித்து செயல் அலுவலர் சுந்தரி கூறுகையில்,' அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து 'பிஸியாக' இருந்ததால், நோட்டீஸ் 'புரூப்' பார்க்கவில்லை. இதனால் நகராட்சி தலைவர் பெயர் விடுபட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது என்றார்.-