மேலும் செய்திகள்
ஒன்றிய அலுவலக கட்டடம் அகற்றும் பணிகள் தீவிரம்
15-Feb-2025
உத்தமபாளையம்; உத்தமபாளையம் பேரூராட்சிக்கு ரூ.1.5 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணி துவங்கியதால் வடக்கு தெருவில் உள்ள பழைய நூலக கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்படத் துவங்கியது.உத்தமபாளையம் தேர்வு நிலை பேரூராட்சி பழமையானது. ஆரம்பத்தில் உத்தமபாளையம் யூனியன் அலுவலகம் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. 1936 ல் தற்போதுள்ள இடத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 88 ஆண்டுகளாக இந்த கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது மக்கள் தொகை பெருக்கம், அலுவலர் பணியிடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் புதிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்ட அரசு உத்தரவிட்டது.அதன் பேரின் மூலதன நிதியின் கீழ் ரூ.1.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கியது. இதனால் அலுவலகம் வடக்கு தெருவில் பழைய நூலக கட்டடத்தில் (பெரிய பள்ளிவாசல் எதிர்புறம் ) வாடகைக்கு செயல்பட துவங்கியது. பொதுமக்கள் புதிய கட்டடம் கட்டும் வரை தங்களது சேவைகளுக்கும், வரி இனங்கள் செலுத்தவும், பழைய நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேரூராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
15-Feb-2025