உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டி.ராஜகோபாலன்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்

டி.ராஜகோபாலன்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்

ஆண்டிபட்டி; டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சேடப்பட்டி, டி.வி.ரெங்கநாதபுரம் ரோடு பட்டாளம்மன் கோயில் அருகில் புதிய மின் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.சேடபட்டியில் விவசாய இணைப்புகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பில் மின் டிரான்ஸ்பார்மர், டி.வி., ரங்கநாதபுரம் ரோடு பட்டாளம்மன் கோயில் அருகே குடியிருப்பு இணைப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் மின் டிரான்பார்மர்க அமைக்கப்பட்டன. இதனை எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், மின் வாரியபெரியகுளம் கோட்ட பொறியாளர் பாலபூமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன், உதவி பொறியாளர்கள் தீபா, ரமேஷ், தி.மு.க., நகர் செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ