உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேப் ரோட்டில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை

கேப் ரோட்டில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை

மூணாறு; இடுக்கி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் இன்று (ஆக.17) பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்படவும், பாறைகள் உருண்டு விழவும் வாய்ப்புகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக நேற்று இரவு போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், இன்று (ஆக.17) இரவும் தடை விதித்து உத்தரவிட்டது. கேப் ரோட்டில் பகல் நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை