உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனவிலங்கு தாக்குதலில் பாதித்த 3611 பேருக்கு இழப்பீடு இல்லை

வனவிலங்கு தாக்குதலில் பாதித்த 3611 பேருக்கு இழப்பீடு இல்லை

மூணாறு: கேரளாவில் வன விலங்கு தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டு கடந்த 2016க்கு பிறகு 3611 பேர் இழப்பீடு வழங்கவில்லை என தெரியவந்தது.கேரளாவில் காட்டு யானை, காட்டு மாடு, பன்றி உள்பட பல்வேறு வனவிலங்குகளின் தாக்குதல் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016 முதல் தற்போது வரை வனவிலங்கு தாக்குதலில் 915 பேர் பலியான நிலையில் 7917 பேர் பலத்த காயம் அடைந்தனர். 4796 கால் நடைகள் பலியாகின. வன விலங்கு தாக்குதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்ததாக வனத்துறையின் கணக்குகள் மூலம் தெரிய வந்தது. 2019 --2020ல் வனவிலங்கு தாக்குதலின் எண்ணிக்கை 6341 ஆக இருந்தது. 2023 - -2024ம் ஆண்டில் 9838 ஆக அதிகரித்தது. 2023-20-24ல் 1603 ஆக அதிகரித்தது.தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ. ஒரு லட்சம் என அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டுக்கு பிறகு 3611 பேருக்கு இழப்பீடு வழங்கவில்லை என வனத்துறை கணக்குபடி தெரியவந்தது. தவறான ஆவணங்கள் ஆகியவற்றால் இழப்பீடு வழங்க இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ