உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு நொச்சி, ஆடாதொடா கன்றுகள்

விவசாயிகளுக்கு நொச்சி, ஆடாதொடா கன்றுகள்

தேனி: இயற்கை பூச்சி விரட்டிகளான நொச்சி, ஆடாதொடா கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: பூச்சி, நோய் மேலாண்மையில் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைக்க விவசாயிகளை வலியுறுத்தி வருகிறோம். இயற்கை முறையில் வேப்ப இலை கரைசல், வேப்ப எண்ணெய், நொச்சி, ஆடாதொடா கரைசல் பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நொச்சி, அல்லது ஆடாதொடா கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இலவச கன்றுகள் பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணை, கீழக்கூடலுார் அரசுபண்ணை ஆகிய இடங்களில் தயாராகி வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ