நோட்டு, புத்தகம் வழங்கும் விழா
போடி:போடி அருகே சங்கராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுருளிவேல் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு மாணவர களுக்கு கூடுதலாக நோட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.