உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவின் பாலகங்களுக்கு நோட்டீஸ்

ஆவின் பாலகங்களுக்கு நோட்டீஸ்

தேனி:தேனி நகர்பகுதியில் செயல்படும் 6 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் தவிர பிற நிறுவன பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பீடி,சிகரெட் விற்பனை தாராளமாக நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. தேனி பஸ் ஸ்டாண்டில் செயல்படும் ஆவின் பாலகங்கள் பல்பொருள் அங்காடியாக செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் நகர்பகுதியில் செயல்படும் பாலங்களில் பிற நிறுவன பொருட்கள் விற்பனை செய்தது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய காரணங்கள் இல்லாவிட்டால் ஆவின் பாலங்களை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை