உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வீடு, கடைகளுக்கு நோட்டீஸ்

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வீடு, கடைகளுக்கு நோட்டீஸ்

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி மூன்று வார்டுகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி மேற்கொள்ள உள்ளதால் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். பெரியகுளம் நகராட்சி தென்கரை 17, 19 வார்டுகளான ஆறுமுகம் தெரு, சுப்பையா தெரு, மாரியம்மன் படித்துறை தெரு மற்றும் 25 வது வார்டு வாகம்புளி தெரு ஆகிய மூன்று வார்டுகளில் 15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடக்க உள்ளது. இந்த வார்டுகளில் ரோட்டினை ஆக்கிரமித்து, வீடுகளின் முன் படிக்கட்டு உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளது. நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேரில் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளில் அகற்றுவதற்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஓரிரு நாட்களில் தாங்களே முன் வந்து ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவின்படி, நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும். அதற்குரிய செலவுகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூல் செய்யப்படும் என கமிஷனர் தமிஹா சுல்தானா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !