உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் நகராட்சி வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் போட்டி போட்டு ஆய்வு

கம்பம் நகராட்சி வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் போட்டி போட்டு ஆய்வு

கம்பம்: கம்பம் நகராட்சியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை உயர் அதிகாரிகள் போட்டி போட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தினமும் சென்று வருகிறது. ஆம்னி பஸ்கள் நிறுத்துமிடம் இல்லாததால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தை முறைப்படுத்த நகராட்சி சார்பில் ரூ.2.65 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த மாதம் துவங்கியது . நகராட்ரி பஸ் ஸ்டாண்ட் கட்டி நீண்ட காலமாகி விட்டதால் ரூ.1.75 கோடியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர ஆணையர் குடியிருப்பு,ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் ரூ.5 கோடிக்கு மேல் மதிப்பீடுகள் இருப்பதால், பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் போட்டி போட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வாரம் கலெக்டர் ஷஜீவனா வந்தார். நேற்று முன்தினம் மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா வந்தார். அவருடன் நகராட்சி தலைவர் வனிதா, கமிஷனர் பார்கவி, பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.ஆய்விற்கு வரும் அதிகாரிகள் ஒவ்வாரு இடத்திலும் துல்லியமாக ஆய்வு செய்து விளக்கங்கள் கேட்டு பெறுகின்றனர். இதனபின் தலைமை பொறியாளர் அல்லது இயக்குநர் ஆய்வு இருக்கும் என்பதால், நகராட்சி அதிகாரிகள் படபடப்பிலேயே உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை