உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

மூணாறு: மூணாறில் ஊராட்சி குப்பை சேமிப்பு கிடங்கிற்கு வந்து செல்லும் ஒற்றை கொம்பன் காட்டு யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளபோதும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.மூணாறு பகுதியில் ஒற்றை தந்தங்களுடன் இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. அவை பெரும்பாலும் ஒன்றாக இணைந்து வருகின்றன. இந்த யானைகள் கல்லார் எஸ்டேட் ரோட்டில் உள்ள ஊராட்சி குப்பை சேமிப்பு கிடங்கில் தீவனத்திற்காக நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம்.அங்கு திறந்த வெளியில் கொட்டப்படும் காய்கறி, உணவு ஆகிய கழிவுகளை தின்னும்போது பிளாஸ்டிக் பொருட்களையும் தின்ன நேரிடுகின்றது. அதனால் இரண்டு யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.குப்பை சேமிப்பு கிடங்கிற்குள் யானைகள் வருவதை தடுக்கும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வனம், ஊராட்சி ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.அச்சம்: குப்பை சேமிப்பு கிடங்கில் தினமும் 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு கடந்தாண்டு செப்.25ல் பணிக்குச் சென்ற தூய்மை பணியாளர்களை ஒற்றை கொம்பன் தங்கியதால் ஒரு பெண் உள்பட மூன்று பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். அந்த பெண் தற்போது வரை சிகிச்சையில் உள்ளார். ஒற்றை கொம்பன்கள் நடமாட்டம் தூய்மை பணியாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி