உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா கடத்திய முதியவர் கைது

கஞ்சா கடத்திய முதியவர் கைது

கூடலுார்: கேரளா குமுளி கலால் துறை சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் பிஜு தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரள பகுதிக்கு நடந்து வந்த முதியவரின் பையில் சோதனை செய்தபோது பயிர் விதைகளுடன் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மதியழகன் 65, என தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசார் தெரிவித்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பான 6 வழக்குகள் உள்ளன. இவரை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ