மூதாட்டி தற்கொலை
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்த ராமர் மனைவி ராஜம்மாள் 74. உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் விஷ மருந்து குடித்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.