நுாறு லிட்டர் மதுபானம் பறிமுதல்: இருவர் கைது
மூணாறு : தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் பாலசுப்பிரமணியன், சிஜூடேனியல் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு சைலன்ட்வாலி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபானங்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. அதுகுறித்து மாட்டுபட்டி எஸ்டேட் நெற்றிமேடு டிவிஷன் ரஜித்குமார் 28, கிராம்ஸ்லாண்ட் பகுதி தீபக் 28, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 லிட்டர் மதுபானங்கள், ஆட்டோ, 2 அலைபேசிகள், ரூ.1200 ஆகியவை கைப்பற்றப்பட்டன. நேற்று ஸ்ரீ நாராயணகுரு பிறந்தநாள் என்பதால் மது கடைகளுக்கு விடுமுறையாகும். அதனை குறிவைத்து எஸ்டேட் பகுதிகளில் சட்டவிரோதமான விற்பனைக்கு இருவரும் மதுபானங்களை கொண்டு சென்றதாக விசாரணையில் தெரிந்தது.