மேலும் செய்திகள்
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் அக்.17ல் திறப்பு
15-Oct-2024
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணையில் இருந்து நேற்று முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இரு அணைகளின் நீரால் 8124 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும்.கொடைக்கானல் மலை அடிவாரம், தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. அணையின் உயரம் 57 அடி. பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படுகிறது. அணையில் 435.37 மி.கன அடி நீர் உள்ளது.நீர் வரத்து வினாடிக்கு 138 கன அடியாக இருந்தது. நேற்று கலெக்டர் ஷஜீவனா விவசாய பயன்பாட்டிற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்தார். இதனால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள 3148 ஏக்கர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, கணவாய்பட்டி, குன்னுவராயன் கோட்டை என 2111 ஏக்கர் என 5259 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.நேற்று முதல் டிச.15 வரை வினாடிக்கு 60 கன அடி, டிச.16 முதல் 2025 ஜன., 31 வரை வினாடிக்கு 50 கன அடி, பிப்.,1 முதல் மார்ச் 15 வரை வினாடிக்கு 45 கன அடி வீதம் 152 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.சோத்துப்பாறை அணை: பெரியகுளம் சோத்துப்பாறை அணை உயரம் 126.28 அடி. நேற்று 126.05 அடியாக இருந்தது. அணையில் 99.84 மி.கனஅடி நீரும், வினாடிக்கு 18.63 கன அடி நீர் வரத்து வந்தது. முதல் போக பாசனத்திற்கான நீரை கலெக்டர் திறந்து வைத்தார். அணையின் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவை உட்பட கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.பாசனத்திற்கு நேற்று முதல் 62 நாட்களுக்கு 30 கன அடியும், அடுத்த 31 நாட்களுக்கு வினாடிக்கு 27 கன அடி நீரும், கடைசி 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி நீரும் என 152 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., சப்--கலெக்டர் ரஜத்பீடன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், நகராட்சி தலைவர் சுமிதா, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
15-Oct-2024