உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எலும்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா

எலும்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா

தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை காமராஜ் மருத்துவனையில் எலும்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா நடந்தது. உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை செயலாளர் டாக்டர் பிரபாகரன் வரவேற்றார். எலும்பு நோய்கள் தொடர்பான சிகிச்சை அளிக்க சிறப்பு நிபுணர் டாக்டர் வணங்காமுடி நிகழ்வில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கினார். எலும்பியல் சிகிச்சை பிரதி வாரம் ஞாயிறு தோறும் காலை 10:00, மதியம் 1:00 மணி வரை செயல்பட உள்ளது. நிகழ்ச்சியில் உறவின் முறை ஆட்சி மன்ற குழு உறப்பினர்கள், மருத்துவமனை செயலாளர் சேர்மராஜன், இணைச்செயலாளர் ஜெயக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் கவுதமன், கீர்த்தனாகன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி