உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெளி மாநில தொழிலாளிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

வெளி மாநில தொழிலாளிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

மூணாறு: பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிமாநில தொழிலாளி ஆம்புலன்சில் ஆண் குழந்தையை பிரசவித்தார். இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே தனியார் ஏலத் தோட்டத்தில் ஜார்கண்ட்டை சேர்ந்த அஞ்சு 32, கணவருடன் வேலை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து சின்னக்கானல் குடும்ப சுகாதார மையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்சை டிரைவர் நைஷல் ஓட்டினார். மருத்துவ டெக்னீஷியன் ராணிசரிதாபாய் உடன் சென்றார். அவர்கள் அஞ்சுவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு சென்றனர். சின்னக்கானல் பகுதிக்கு வந்தபோது அஞ்சுக்கு பிரசவவலி அதிகரித்தது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால் மருத்துவ டெக்னீஷியன், டிரைவர் ர் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தனர். அஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாய், சேய் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர். டெக்னீஷியன், டிரைவர் ஆகியோரை பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை