உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெயின்டர் தற்கொலை

பெயின்டர் தற்கொலை

கம்பம் : கம்பம் கம்பமெட்டு காலனியை சேர்ந்தவர் அப்துல் முத்தலிபு 52, இவரது மனைவி ரம்ஜான் பேகம் 47, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அப்துல் முத்தலிபு பெயின்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாலை அவர் மின்வாரிய அலுவலக ரோட்டில் உள்ள புளியந்தோப்பில் தூக்கிட்டதாக தெரிவித்தனர். ஆம்புலன்சில் அவரது உடலை கம்பம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. மனைவி புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ