உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி செயலர்: 20 இடத்திற்கு 6324 பேர் விண்ணப்பம் :ஒரு வேலைக்கு 316 பேர் போட்டி

ஊராட்சி செயலர்: 20 இடத்திற்கு 6324 பேர் விண்ணப்பம் :ஒரு வேலைக்கு 316 பேர் போட்டி

தேனி: தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடத்திற்கு 6324 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 1450 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு கடந்த அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவ.,9 என தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்வித்தகுதி 10ம் வகுப்பு, தேர்வு இல்லை, நேர்முகத்தேர்வு மட்டும், விண்ணப்பக்கட்டணம் ரூ. 50, ரூ.100 என அறிவிக்கப் பட்டிருந்தது. தேர்வு இல்லை, கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதால் 10ம் வகுப்பு மட்டும் முடித்வர்கள் இன்றி பிளஸ் 2, பட்டப்படிப்பு, பொறியியல், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு நவ.,9 வரை 6324 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ