உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பங்குனி உத்திரம் தேர் திருவிழா நிறைவு

பங்குனி உத்திரம் தேர் திருவிழா நிறைவு

பெரியகுளம்:பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா ஏப்.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டகப்படிதாரர்கள் நடத்திய பத்து நாட்கள் திருவிழாவில் தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. ஏப்.10ல் தேரோட்டத்தை தொடர்ந்து, மறுநாள் ஏப்.11 மண்டகப்படி நிறைவு நாளில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி