உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முல்லைப் பெரியாற்று பாலத்தில் பார்க்கிங்: பஸ்கள் செல்ல சிரமம்

 முல்லைப் பெரியாற்று பாலத்தில் பார்க்கிங்: பஸ்கள் செல்ல சிரமம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்று பாலத்தில் லாரிகளை பார்க் செய்வதால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகளை கடந்ததால், அந்த பாலத்தை ஒட்டியே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. குமுளி, கம்பத்தில் இருந்து வரும் பஸ்கள் இந்த புதிய பாலத்தின் வழியே தேனி செல்லவும், தேனியில் இருந்து வரும் பஸ்கள், பழைய பாலத்தின் வழியே உத்தமபாளையம் நகர் வழியாக கம்பம் செல்லவும் முடிவு செய்து, போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சமீப காலமாக பழைய பாலத்தில் லாரிகளை பார்க் செய்து வருகின்றனர். இதனால் தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்கள் பாலத்தை கடக்கும் போது சிரமப்பட வேண்டி உள்ளது. போலீசார் பாலத்தில் லாரிகள் பார்க் செய்வதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை