உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்

பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள்

தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணிபுரிந்தும், படிப்பிற்காகவும் சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வரை தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தேனி மாவட்டத்திற்கு பலரும் தீபாவளி கொண்டாட வந்திருந்தனர். நேற்று விடுமுறை முடிந்ததால் பலரும் கோவை, சென்னை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ், ரயில் மூலம் புறப்பட்டனர். பயணிகள் வசதிக்காக சென்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் 30 பஸ்களையும், கோவைக்கு 65, திருப்பூர் 25, திண்டுக்கல் 20, திருச்சி 8 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதனால் தேனி கர்னல் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், போடி, தேனி ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. 'பயணிகள் வருகையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயார் நிலையில் வைத்திருப்பதாக,' போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ஜெகதீஷன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை