உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சி அலுவலகத்தில் முடங்கிய அட்டவணை பலகை தேவாரம் பஸ்ஸ்டாண்டில் பயணிகள் அவதி

பேரூராட்சி அலுவலகத்தில் முடங்கிய அட்டவணை பலகை தேவாரம் பஸ்ஸ்டாண்டில் பயணிகள் அவதி

தேவாரம் : தேவாரம் பஸ்ஸ்டாண்டில் பஸ்கள் வருகை,புறப்படும் நேரம் குறித்த அட்டவணை பலகை வைக்காமல் பேரூராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.தேவாரம் பஸ்ஸ்டாண்ட்டிற்கு கம்பம், போடி, உத்தமபாளையம் மார்க்கமாக 5 பஸ்களும், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம் மார்க்கமாக 20 பஸ்களும் சென்று வருகின்றன. தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி செலவில் வணிக வளாகக் கடைகளுடன் பஸ்ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது.தேவாரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து வெளியூர் செல்லும், வரும் நேரம் குறித்த கால நேர அட்டவணை பலகை வைக்காமல் தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. பஸ்களின் விபரம் அறிய முடியாமல் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பயணிகள் பயன் பெறும் வகையில் பஸ்கள் புறப்படும் நேரம் குறித்த அட்டவணை பலகையை பஸ்ஸ்டாண்டில் அமைத்திட தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !