உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்

பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்

கூடலுார்: பராமரிப்பின்றி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் புலம்புகின்றனர். தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டி 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர், இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. நன்கொடையாளர் கட்டி கொடுத்த குடிநீர் தொட்டியையும் பராமரிக்காமல் காட்சி பொருளாக உள்ளது. கழிப்பறை கட்டடம் மட்டுமே உள்ளது. ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது தேர்வு விடுமுறையானதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். மணி மண்டப வளாகம் பராமரிக்காமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் புலம்பிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
அக் 04, 2025 17:38

இங்கு பராமரிக்காமல் கேவலமான நிலையில் வைத்திருப்போம். அதற்கு பரிகாரமாக இங்கிலாந்தில் அவர் பிறந்த ஊரில் லட்சம் புவுண்டுகள் செலவழித்து சிலை வைப்போம்.


அப்பாவி
அக் 04, 2025 10:20

இந்தியாவுக்கு , குறிப்பாக தமிழகத்துக்கு என்ன செய்தாலும் நன்றியே இருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை