உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட கூடைப்பந்து போட்டி பென்னிகுவிக் அணி வெற்றி

மாவட்ட கூடைப்பந்து போட்டி பென்னிகுவிக் அணி வெற்றி

தேனி: தேனியில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பென்னிகுவிக் கூடைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து தொடர் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் ஜூன் 6ல் துவங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 11 அணிகள் பங்கேற்றன. முதலில் நாக் அட் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் பென்னிகுவிக் அணி, எல்.எஸ்., மில்ஸ் அணி மோதின. இதில் பென்னிகுவிக் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.பரிசளிப்பு விழாவிற்கு எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் சிதம்பர சூரிய வேலு, எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கழக துணைத் தலைவர்கள் செந்தில் நாராயணன், சுதாகர், பொருளாளர் அர்ஜூன், எல்.எஸ்., மில்ஸ் முதன்மை நிதி அதிகாரி ஞானகுருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை