உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

தேனி : தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ.6750 ஓய்வூதியம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் சுப்புராஜ், ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாநில துணைத்தலைவர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி