உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர் சங்க செயற்குழு

ஓய்வூதியர் சங்க செயற்குழு

தேனி: தமிழ்நாடு சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், மாவட்ட செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் சங்க செயல்பாடு குறித்து விளக்கினார். வரவு செலவு விபரங்களை பொருளாளர் பவுன்தாயிடம், மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் ஒப்படைத்தார். சங்க மாவட்டத் தலைவர் சின்னசாமி, மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க கூட்மைப்பின் மாவட்டத் தலைவர் உடையாளி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி பங்கேற்றனர். செப்.1 முதல் 15 வரை மாவட்டம் முழுவதும் முறையான ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசு குறித்து நியாயம் கேட்டு மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய வேண்டும் என, மாநில துணைத் தலைவர் அன்பழகன் பேசினார். மாவட்டப் பொருளாளர் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை