மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
16-Jul-2025
தேனி : அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. இதில் 'மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாநில அரசு நடத்த வேண்டும், அனைத்து மருத்துவ மனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும், ரயில், விமானத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்,'உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.துணை தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் முருகேசன், சவுகத் அலி, சங்க மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16-Jul-2025