உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்

நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்

கூடலுார்: பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ள தெருவை சீரமைக்காததால், அருகில் உள்ள பகுதியில் ரோடு அமைக்க வந்த நகராட்சி அலுவலர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கூடலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சுண்ணாம்புக்காரத் தெரு பல மாதங்களாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இத்தெருவை ஒட்டியுள்ள பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியது.பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ள தெருவை சீரமைக்காமல் ஒட்டியுள்ள பகுதியில் தார் ரோடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி பொறியியல் பிரிவு அலுவ லர் சரவணனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். விரைவில் தெருவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி